/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ., ஆட்சி தொடர்ந்தால் அடுத்த தேர்தல் இல்லை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அச்சம்
/
பா.ஜ., ஆட்சி தொடர்ந்தால் அடுத்த தேர்தல் இல்லை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அச்சம்
பா.ஜ., ஆட்சி தொடர்ந்தால் அடுத்த தேர்தல் இல்லை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அச்சம்
பா.ஜ., ஆட்சி தொடர்ந்தால் அடுத்த தேர்தல் இல்லை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அச்சம்
ADDED : மார் 30, 2024 04:26 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் நடந்த இண்டியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், பா.ஜ., ஆட்சி தொடர்ந்தால் அடுத்த தேர்தல் நடைபெறாது.' என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன்,சிவகங்கை காங்.,வேட்பாளர் கார்த்தி முன்னிலையில் சிதம்பரம் பேசியதாவது: என்னுடைய அச்சம் இந்த தேர்தலைப்பற்றியதல்ல. 5 ஆண்டுகளுக்கு பின் இந்த தேர்தல் நடக்குமா என்பது தான். 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்யும் பா.ஜ., ஆட்சி நடத்த வரவில்லை, அதற்காக வந்திருந்தால் 2 தலையான பிரச்னைகளான விலைவாசியை கட்டுப்படுத்தியிருப்பார்கள். வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பார்கள். மக்கள் கேட்பதும் அதைத்தான். ஆனால்அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்தநாகேஸ்வரன் சொல்கிறார்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்னைகள் அரசு தீர்க்கும் என்று நினைக்காதீர்கள். அரசுக்கு அந்த சக்தி கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். என்கிறார். நாடெங்குமிருந்து அதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சொல்லிய உண்மை இந்த அரசுக்கு அந்த சக்தி கிடையாது என்பது தான். பா.ஜ., அரசுக்கு அவற்றை தீர்க்க, கணிக்கவே சக்கி கிடையாது. எதிர்பார்த்தீர்கள் என்றால் தவறு என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மத்திய அரசு தலையிட்டு வழக்கிட்டு கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்று யாராவது நம்பியிருப்போமா.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு பெரும்பான்மையுள்ள முதல்வரை மறு நாளே கைது செய்து விட்டால். நீங்கள் தேர்ந்நெடுத்த முதல்வரை மறுநாளே கைது செய்ய முடியும் என்றால் எதற்கு தேர்தல், சட்டமன்றம். இது கெஜ்ரிவாலுக்கு விடும் எச்சரிக்கை மட்டுமல்ல. அனைத்து முதல்வர்களுக்குமானது.
அடுத்த தேர்தல் வரவேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வரக்கூடாது என்றார்.

