/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அபாயம் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கும் சாக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் கவலை
/
அபாயம் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கும் சாக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் கவலை
அபாயம் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கும் சாக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் கவலை
அபாயம் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கும் சாக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் கவலை
ADDED : மே 19, 2024 05:32 AM

காரைக்குடி, : காரைக்குடி சுற்றுப் பகுதிகளில் பெய்து வரும் திடீர் மழையால் தோட்ட பயிர்கள் தப்புமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெத்தாச்சி குடியிருப்பு, பெரியகோட்டை, மித்திரங்குடி, சிறுகப்பட்டி, வீரசேகரபுரம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் கத்தரி, வெண்டை, புடலை, சோளம், பாகற்காய், கீரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் காரைக்குடி புதுக்கோட்டை அறந்தாங்கி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. சாக்கோட்டை வட்டாரத்தில் விளையும் பச்சை கத்தரிக்காய், வெண்டைக்கு தனி மவுசு உண்டு. தற்போது விவசாயிகள் பலரும் தங்களது தோட்டத்தில் கத்தரி வெண்டை பூசணி சோளம் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. திடீர் மழை காரணமாக கத்தரி மற்றும் வெண்டை செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பெத்தாச்சி குடியிருப்பு விவசாயி முத்து கூறுகையில்:
மாசியில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை பயிரிடுவோம். தொடர்ந்து ஆடி ஆவணி மாதங்களில் நெல் விதைப்பில் ஈடுபடுவோம். போதிய மழையில்லாததால் பெரும்பாலும் போர்வெல் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. கடந்த மாசியில் கத்தரி மற்றும் வெண்டை பூசணி உள்ளிட்ட செடிகளை பயிரிட்டோம். கோடையில் வழக்கத்திற்கு மாறாக திடீர் கனமழை பெய்து வருகிறது.
இப்போது தான் கத்தரி பூத்து காய்க்கும் பக்குவத்திற்கு வந்துள்ளது.கன மழை பெய்தால் செடிகள் அழுகும் நிலை உருவாகும்.இதேநிலைத் தொடர்ந்தால் விளைச்சல் இல்லாமல் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு உள்ளது. மழை பெய்தால் இரவானாலும் சென்று வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வருகிறோம்.

