/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலம் அமைக்காததால் ரோட்டில் தேங்கும் சகதி
/
பாலம் அமைக்காததால் ரோட்டில் தேங்கும் சகதி
ADDED : மே 18, 2024 05:46 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இருந்து கண்ணமங்கலப்பட்டி வழியாக மேலுார் செல்லும் சாலை சில மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது.
சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் இச்சாலை இணைப்பில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. கான்கிரீட் பாலம் அமைக்காமல் தற்காலிகமாக குழாய்களை பதித்துள்ளனர். இதனால் மழை காலங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் அப்பகுதி சாலையில் ஓடி குடியிருப்பு முன்பு தேங்கி கிடக்கிறது. செருதப்பட்டி செல்லும் சாலை சகதியாக மாறி அவ்வழியாக டூவீலரில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது.
எனவே இச்சாலையில் விரைந்து பாலம் அமைத்து தண்ணீர் முறையாக வெளியேற நெடுஞ்சாலைத் துறையினர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

