/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் இண்டியா கூட்டணி அரணாக நிற்கும்: சிதம்பரம்
/
தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் இண்டியா கூட்டணி அரணாக நிற்கும்: சிதம்பரம்
தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் இண்டியா கூட்டணி அரணாக நிற்கும்: சிதம்பரம்
தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் இண்டியா கூட்டணி அரணாக நிற்கும்: சிதம்பரம்
ADDED : மார் 31, 2024 11:43 PM

மானாமதுரை: தமிழகத்தில் மீதமுள்ள 2 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சிக்கு எவ்வித தீங்கோ,ஆபத்தோ ஏற்பட்டால் இண்டியா கூட்டணி அரணாக நிற்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
மானாமதுரையில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்பெரிய கருப்பன், வேட்பாளர் கார்த்தி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, காங்., மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் 3 ஆண்டு காலம் நல்ல முறையில் ஆட்சி செய்த தி.மு.க.,விற்கு மீதமுள்ள 2 ஆண்டுகளில் எவ்விததீங்கோ, ஆபத்தோ ஏற்பட்டால் இண்டியா கூட்டணி அரணாக நிற்கும்.மீதமுள்ள 2 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் திட்டம் புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் என பல திட்டங்களை தீட்டி சாதனை படைத்துள்ளார். சென்னை மற்றும் துாத்துக்குடி போன்ற நகரங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மத்திய அரசு ஒரு காசு கூட கொடுக்கவில்லையே, நமக்கு வரவேண்டிய நிதியை ஏன் தரவில்லை.
பிரதமர் மோடிக்கு தற்போது தமிழ் மொழி மீது ஆசை வந்துள்ளது. அவருக்கு தமிழ் தெரியவில்லையே என ஆதங்கப்படுகிறார். தமிழ் மீது பிரதமர் மோடி காட்டக்கூடிய அன்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தமிழர்கள் மீது ஏன் அன்பு காட்டவில்லை. தமிழை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம். பேராபத்து வந்துள்ளது.
இந்த பேராபத்திலிருந்து தமிழ்நாட்டை, தமிழை, தமிழர்களின் நலனை, ஜனநாயகத்தை காப்பாற்றிக்கொள்ள இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

