/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலையில் தங்கும் விடுதி இல்லாமல் தவித்த பக்தர்கள்
/
பிரான்மலையில் தங்கும் விடுதி இல்லாமல் தவித்த பக்தர்கள்
பிரான்மலையில் தங்கும் விடுதி இல்லாமல் தவித்த பக்தர்கள்
பிரான்மலையில் தங்கும் விடுதி இல்லாமல் தவித்த பக்தர்கள்
ADDED : ஏப் 23, 2024 12:13 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் தங்கும் விடுதி இல்லாததால் திருவிழாவுக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகின்றனர்.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்கும் பிரான்மலை அடிவாரத்தில் சங்க இலக்கிய புகழ்பெற்ற மங்கைபாகர் தேனம்மை கோயில் உள்ளது. மலை உச்சியில் பாலமுருகன், விநாயகர் சன்னதிகளும், தர்காவும் உள்ளது. மலை முழுவதும் நிறைய சுனை தீர்த்தங்களும் உள்ளன.
இப்பகுதிக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய வசதிகள் இங்கு இல்லை. குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் பயணிகளும் தங்கி செல்ல விடுதி இல்லை. 1989 ல் சுற்றுலா துறை சார்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதி பாழடைந்து பாம்புகளின் குடியிருப்பாக மாறிவிட்டது.
பராமரிப்பு இல்லாமல் போனதால் கட்டடம் பழுதாகி விட்டது.
சித்திரை திருவிழாவின் போது 10 நாட்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தங்கிச் செல்ல தங்கும் விடுதி வசதி இல்லை.
பலர் ரத வீதியிலும் பிரான்மலை பாறைகளிலும் தங்கி இருந்து ஊருக்கு திரும்புகின்றனர். எனவே இங்கு புதிய விடுதி கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

