/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயில் பொங்கல் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
தாயமங்கலம் கோயில் பொங்கல் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
தாயமங்கலம் கோயில் பொங்கல் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
தாயமங்கலம் கோயில் பொங்கல் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஏப் 04, 2024 11:24 PM

இளையான்குடி : இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து தீச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு 7:10 மணிக்கு மேல் மின் அலங்கார தேர் பவனி நடைபெற உள்ளது.
இக்கோயிலில் திருவிழா கடந்த 28ம் தேதி இரவு 10:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு முதலே தாயமங்கலத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு பொங்கல் வைத்து தீச்சட்டி,ஆயிரம் கண் பானை,கரும்பு தொட்டில்,பால்குடம் எடுத்து கோயிலை வலம் வந்து அம்மனை வழிபட்டனர்.
இன்று இரவு 7:10 மணிக்கு மேல் மின் அலங்கார தேரோட்டமும்,6ம் தேதி காலை 7:40 மணிக்கு பால்குடம், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கும் நடைபெற உள்ளது.7ம் தேதி கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை,இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

