/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தலால் பள்ளி தேர்வு தேதி மாற்றம்; மாணவர்கள், பெற்றோர் குழப்பம்
/
தேர்தலால் பள்ளி தேர்வு தேதி மாற்றம்; மாணவர்கள், பெற்றோர் குழப்பம்
தேர்தலால் பள்ளி தேர்வு தேதி மாற்றம்; மாணவர்கள், பெற்றோர் குழப்பம்
தேர்தலால் பள்ளி தேர்வு தேதி மாற்றம்; மாணவர்கள், பெற்றோர் குழப்பம்
ADDED : ஏப் 04, 2024 11:26 PM
காரைக்குடி : தமிழகத்தில் 4 முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அத்தேதியில் பள்ளி உண்டா, இல்லையா என மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1 முதல் 9 வகுப்பு வரை, முழு ஆண்டு தேர்வு ஏப்.18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்.19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் தேர்தலுக்கு முன்பாகவே தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏப்.13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரம்ஜானை முன்னிட்டு பள்ளி தேர்வு தேதியை மாற்றிட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஏப்.10 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஏப்.22ம் தேதியும் ஏப்.12 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஏப்.23 க்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஏப்.8 ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையா அல்லது பள்ளியா என மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

