/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதியில்லா மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு
/
அனுமதியில்லா மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 04, 2024 11:27 PM
பூலாங்குறிச்சி : திருப்புத்துார் ஒன்றியம் செவ்வூர் பிரம்ம அய்யனார் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
செவ்வூர் பிரம்ம அய்யனார் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். தேர்தல் நன்னடத்தை விதிகளால் தடை இருந்தும் நேற்று மஞ்சுவிரட்டு சம்பிரதாயமாக நடத்தப்பட்டது. காலை 10:30 மணி அளவில் தொழுவிலிருந்து 80 காளைகள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. சுற்று வட்டார பகுதிகளில் 100 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
மாடு முட்டியதில் 2 பேர் மட்டும் காயம் அடைந்தனர். அரசு அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக வி.ஏ.ஓ., அழகுராஜா புகாரின் பேசில் பூலாங்குறிச்சி போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

