/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் பா.ஜ., வேட்பாளர் பிரசாரம்
/
தேவகோட்டையில் பா.ஜ., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் சிவகங்கை தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் பலர் வெளிநாட்டிலும், திருப்பூர் போன்ற வெளிமாவட்டங்களிலும் வேலைக்காக சென்று கஷ்டப்படுகிறார்கள். பிரதமரிடம் தொகுதி நிலைமையை எடுத்துக் கூறி ஆறு சட்டசபை தொகுதிக்கும் தலா ஒரு தொழிற்சாலை துவங்கப்படும்.
கல்விக்கடன் என்ற பெயரில் மாணவர்களை கடனாளியாக்கி உள்ளனர். கடனை திருப்பி செலுத்தும் வகையில் தொழிற்சாலை மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்றார்.

