/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஞ்சாட்சரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்
/
பஞ்சாட்சரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 16, 2024 05:10 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே சூரக்குளம் பஞ்சாட்சரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிேஷகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.இக்கோயிலில் செப்.,12 அன்று காலை 8:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின.
அன்று மாலை 4:00 மணிக்கு மங்கள வாத்தியம், திருமுறை பாராயணமும், செப்., 13 அன்று காலை 8:00 மணிக்கு சாஸ்தா ப்ரீதி பூஜை, அன்று மாலை 4:00 மணிக்கு முதற்கால பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது.
யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை 7:30 மணி முதல் 8:00 மணிக்குள் பஞ்சாட்சரமுடைய அய்யனார் கோபுர கலசம் உட்பட பரிவார மூர்த்திகள், ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர்.
நேற்று காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகமும், அதனை தொடர்ந்து அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிேஷக கமிட்டி தலைவர் அண்ணாமலை செட்டியார், துணை தலைவர் சம்பத் செட்டியார், செயலாளர்கள் அழகப்பன் செட்டியார், ரவீந்திரன் செட்டியார், பொருளாளர் பஞ்சாட்சரம் செட்டியார் ஆகியோர் கும்பாபிேஷக விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.
சிவகங்கை ஆப்டெக் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நித்யா கண்ணப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

