/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் நியமனம்
/
அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் நியமனம்
ADDED : மார் 24, 2024 05:24 AM
சிவகங்கை : சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணி செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு, சட்டசபை வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று பாடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதிக்கு அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணியாற்றிட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், எம்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பிஆர்., செந்தில்நாதன் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி.கே., வைரமுத்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

