/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ரோடு அமைக்காவிடில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
/
மானாமதுரையில் ரோடு அமைக்காவிடில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
மானாமதுரையில் ரோடு அமைக்காவிடில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
மானாமதுரையில் ரோடு அமைக்காவிடில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
ADDED : ஏப் 01, 2024 10:13 PM
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள ராம் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் முக்கியமாக 3 தெருக்களும், 10க்கும் மேற்பட்ட குறுக்குத் தெருக்களும் உள்ளன.
ராம்நகர் 1வது குறுக்கு தெரு கிழக்கு பகுதியில் ரோடு அமைக்க வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. எனினும் தற்போது வரை ரோடு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட கலெக்டரிடமும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கத்தினர் மானாமதுரை நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு கூறுகையில், ராம்நகர் 1வது குறுக்குத் தெருவில் ரோடு அமைக்க பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.