/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழநெட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுகோள்
/
கீழநெட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுகோள்
கீழநெட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுகோள்
கீழநெட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 29, 2024 05:34 AM

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூரில் விரைவாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கீழநெட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை விவசாயம் செய்து தற்போது சம்பா நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் குறைந்த விலைக்கு தனியாரிடம் நெல்லை விற்கும் நிலை உள்ளது.
கீழநெட்டூர் விவசாயி கண்ணதாசன் கூறியதாவது: கீழநெட்டூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொள்முதல் செய்வதற்காக வைத்துள்ள நிலையில் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் கீழநெட்டூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

