/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கைக்கு பயணிகள் வருகை மூலம் ரயில்வேக்கு ரூ.26.08 கோடி வருவாய்
/
சிவகங்கைக்கு பயணிகள் வருகை மூலம் ரயில்வேக்கு ரூ.26.08 கோடி வருவாய்
சிவகங்கைக்கு பயணிகள் வருகை மூலம் ரயில்வேக்கு ரூ.26.08 கோடி வருவாய்
சிவகங்கைக்கு பயணிகள் வருகை மூலம் ரயில்வேக்கு ரூ.26.08 கோடி வருவாய்
ADDED : ஏப் 19, 2024 05:18 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயிலில் பயணிகள் வந்து சென்றதன் மூலம் கடந்த ஆண்டு (2023 ஏப்.,- 2024 மார்ச்) ரூ.26 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 457 வருவாய் கிடைத்துள்ளது.
மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ரஸ்தா உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக சென்னைக்கும், பிற மாநிலங்களுக்கும், அங்குஇருந்து சிவகங்கைக்கும் ரயிலில் பயணிகள் வந்து செல்கின்றனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகை தந்த 16 லட்சத்து 56 ஆயிரத்து 165 பயணிகள் மூலம் ரூ.11 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 865ம், தேவகோட்டை ரஸ்தா ஸ்டேஷனுக்கு 3 லட்சத்து 70 ஆயிரத்து 528 பயணிகள் வருகை தந்ததன் மூலம் ரூ.2 கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 465ம், மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகை தந்த 8 லட்சத்து 57 ஆயிரத்து 989 பயணிகள் மூலம் ரூ.7 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 846ம், சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகை தந்த 6 லட்சத்து 82 ஆயிரத்து 351 பயணிகள் மூலம் ரூ.4 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 281 வரை வருவாய் கிடைத்துஉள்ளது.
ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு 35 லட்சத்து 76 ஆயிரத்து 33 பயணிகள்வந்து சென்றதன் மூலம் ரூ.26 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 457 வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஸ்டேஷன்களுக்கு தினமும் சராசரியாக 1010 முதல் அதிக பட்சம் 4500 பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.

