/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் காவிரி குடிநீர் திட்டப்பணி தாமதம்; 4 ஆண்டுகளாகியும் நிறைவடையாததால் அவதி
/
சிங்கம்புணரியில் காவிரி குடிநீர் திட்டப்பணி தாமதம்; 4 ஆண்டுகளாகியும் நிறைவடையாததால் அவதி
சிங்கம்புணரியில் காவிரி குடிநீர் திட்டப்பணி தாமதம்; 4 ஆண்டுகளாகியும் நிறைவடையாததால் அவதி
சிங்கம்புணரியில் காவிரி குடிநீர் திட்டப்பணி தாமதம்; 4 ஆண்டுகளாகியும் நிறைவடையாததால் அவதி
ADDED : மே 18, 2024 06:07 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நான்கு ஆண்டுகளாகியும் காவிரி குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதுார் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் சிங்கம்புணரி அருகே தேனம்மாள்பட்டியில் கட்டப்படும் தொட்டியில் நிரப்பப்படும். இங்கிருந்து அனைத்து ஒன்றிய பகுதிக்கும் குழாய் மூலம் அனுப்பப்பட்டு பிறகு ஊராட்சிகளுக்கும் வீடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக தேனம்மாள்பட்டியிலிருந்து மருதிபட்டி, முறையூர் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் பணி துவக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதனால் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆபத்தான நிலையில் சரி செய்யப்படாமலும் உள்ளது. இய்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் ஒரு சில ஊராட்சிகளில் ஏற்கனவே வந்த குடிநீரே விநியோகிக்கப்படுகிறது. பல ஊராட்சிகளில் இன்னும் நீரேற்றம் செய்யப்படாமல் குழாய்கள் காற்று வாங்குகிறது. இத்திட்டத்தை நம்பி எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் இப்பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில் இதை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர காலதாமதம் ஆகிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும்.

