/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழிற்சாலை வராதது ஏன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கேள்வி
/
தொழிற்சாலை வராதது ஏன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கேள்வி
தொழிற்சாலை வராதது ஏன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கேள்வி
தொழிற்சாலை வராதது ஏன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கேள்வி
ADDED : ஏப் 08, 2024 05:23 AM
காரைக்குடி : நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் நினைத்திருந்தால் சிவகங்கை தொகுதிக்கு அதிக தொழிற்சாலை உள்ள தொகுதியாக மாறியிருக்கும் என சிவகங்கை அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., செந்தில்நாதன் தெரிவித்தார்.
சிவகங்கை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கொப்புடையம்மன் கோயில், செஞ்சை, கழனிவாசல் அண்ணா நகர், டி டி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் மெய்யப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசுகையில்:
கடந்த முறை, ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கார்த்தி எம். பி., இத்தொகுதி மக்களுக்கு என்ன செய்தார். ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். உள்துறை அமைச்சராக இருந்தார். தொழில்துறை தொடங்குபவர்கள் நிதியமைச்சரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு தொழில் துறை தொடங்குபவர்களிடம் தனது சிவகங்கைத் தொகுதியில் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை உள்ள பகுதியாக சிவகங்கை தொகுதி இருந்திருக்கும் என்றார்.

