/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் படிக்கலாம்
/
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் படிக்கலாம்
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் படிக்கலாம்
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் படிக்கலாம்
ADDED : மே 19, 2024 02:38 AM
சேலம்: சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் நிர்வாக அறிக்கை:
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் பாடப்பிரிவு, டில்லி கட்டட கலை கவுன்சில் அங்கீகாரம் பெற்று பயிற்றுவிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதலாம் ஆண்டில் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் சேர்ந்து படிக்கலாம். இதை முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் நேஷனல் அப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்டர் எனும் நுழைவுத்தேர்வு எழுதி, பி.ஆர்க்., முதலாண்டில் சேரலாம். அத்துடன், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழக மாணவர் சேர்க்கை விதிப்படி டிப்ளமோவில் எந்த பிரிவில் படித்திருந்தாலும், பி.இ., 2ம் ஆண்டில் விரும்பும் பாடப்பிரிவிலும் சேரலாம்.
இக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், கல்லுாரியில் உள்ள சோனா இன்குபேசன் சென்டர், சோனா கராஜ் மூலம் ஸ்டார்ட் அப்ஸ் தொடங்கி, படிக்கும்போதே சம்பாதிக்கலாம். இக்கல்லுாரி சேர்மன் வள்ளியப்பா, கட்டட கலை மீது ஆர்வம் கொண்டவர். இதற்கு சான்றாக, சோனா கல்வி குழும கட்டடமான, 150 அடி உயர, 'வள்ளியப்பா ப்ளாக்' கட்டட கலைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. நவீன கட்டடங்களை வடிவமைக்கும் ஆர்கிடெக்ட் ராகுல் காத்ரி, வடிவமைத்த கட்டடங்களை, இங்கு படிக்கும் மாணவர்கள் பார்வையிட்டு கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறலாம். அதனால் டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் துறையில் மாணவ, மாணவியர் சேர்ந்து பயன்பெறலாம்.

