/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெண்டை நடவு செய்தால் நல்ல விலை கிடைக்கும்
/
வெண்டை நடவு செய்தால் நல்ல விலை கிடைக்கும்
ADDED : மார் 21, 2024 02:10 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10,000 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களான மலர்கள், காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது வெண்டை நடவு செய்தால், நல்ல விலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:
தை பட்டம், சித்திரை பட்டத்தில் வெண்டை நடவு செய்யப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வெண்டை நடவு செய்தால் நல்ல விலை கிடைக்கும். கடும் வெயிலால் சாறு உறிஞ்சும் பூச்சி, வைரஸ் தாக்கம், காய் புழு பாதிப்பு, செம்போன் போன்ற தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பெரும்பாலான விவசாயிகள் வெண்டை நடவு செய்வதில்லை. தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும். தற்போது வெண்டை நடவு செய்வதால், 45 நாட்களில் அறுவடை தொடங்கி, 18 மாதங்களில் மகசூல் கிடைக்கும். கோடையில் முன்கூட்டியே பூச்சி நோய் மேலாண் முறையை கடைபிடித்து, நோயை கட்டுப்படுத்தலாம். தொழில்நுட்ப ஆலோசனை தேவைப்படுவோர், 96002 84443 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

