/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குரு பூர்ணிமாவை ஒட்டி பாபா கோவிலில் பூஜை
/
குரு பூர்ணிமாவை ஒட்டி பாபா கோவிலில் பூஜை
ADDED : ஜூலை 11, 2025 01:28 AM
சேலம், குரு பூர்ணிமாவை ஒட்டி, சேலம், சூரமங்கலம், முல்லை நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று, சிறப்பு அபி ேஷகம் நடந்தது.
பட்டாடை அணிவித்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சீரடி சாய்சேவா டிரஸ்ட் குழுவினர், பாபா பாடல்களை பாடினர். தொடர்ந்து பாபாவுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. அதில் பாபா படத்தை வைத்து கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
அதேபோல் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள பாபா கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம், ஆராதனை, ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் பல்வேறு பாபா கோவில்களிலும் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது.

