/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோசடி பணத்தில் வாங்கிய சொத்துகள் எங்கே? காவலில் எடுத்து 2 பேரிடம் போலீஸ் 'கிடுக்கி'

ADDED : அக் 10, 2024 03:19 AM
சேலம்: சேலம் அருகே வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர், 40. இவர், 2019ல் சேலம் உள்பட, 11 இடங்களில், எஸ்.வி.எஸ்., ஜூவல்லர்ஸ் பெயரில் நகைகடைகள் தொடங்கி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தார். பின் கடந்தாண்டு நவ., 10ல் கூட்டாளிகள், 4 பேருடன் தலைமறைவானார்.
தர்மபுரியில் நடந்த மோசடி புகாரில், அம்மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த மே மாதம், சபரிசங்கரை கைது செய்தனர். சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகை கடைகளுக்கு முதன்மை செயல் அதிகாரியாக செயல்பட்ட ஆட்டையாம்பட்டியை சேர்ந்த முருகன், 38, மார்க்கெட்டிங் மேலாளர் பிரகாஷ், 32, ஆகியோரை, கடந்த, 1ல் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும், 2 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க, கோவை, 'டான்பிட்' நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், 2 நாள் அனுமதி வழங்கி நீதிபதி செந்தில்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, முருகன், பிரகாஷ் ஆகியோரை, மாலை, 5:00 மணிக்கு, சேலம் அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் தனித்தனியே விசாரித்தனர். பின் ஆட்டையாம்பட்டியில் உள்ள அவர்களது வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் விசாரணை நடக்கிறது. மோசடி செய்த நகை, பணத்தை யார், யார் பதுக்கி வைத்துள்ளனர், பங்கு பிரித்து கொண்டவர்களின் விபரம், மோசடி பணத்தில் ஊர் வாரியாக வாங்கப்பட்ட அசையும், அசையா சொத்து போன்ற முழு விபரங்களை, அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.