தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்


ADDED : ஜன 29, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அஸ்தம்பட்டி மைய தாலு-காவில் நேற்று காலை, 10:00 மணி முதல் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

வட்ட தலைவர் கலையரசு தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலகத்தை நவீன மயமாக்குதல்; வி.ஏ.ஓ., பணிக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்துதல்; தேர்வுநிலை கிராம நிர்-வாக அலுவலர், சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர் என அஸ்-தஸ்து வழங்கி, அதற்கேற்ப ஊதியம் வழங்குதல்.

பதவி உயர்வில், 30 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்தி, காலவரம்பை 6 ஆண்டில் இருந்து, 3 ஆண்டாக மாற்றிய-மைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கு தாலுகாவில் நடந்த போராட்டத்துக்கு வட்ட செயலர் தீபன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலர் ரமேஷ் கூறுகையில், 'வி.ஏ.ஒ.,க்கள் வசம், நகர்புற நில ஆவணத்தை ஒப்படைக்க அரசு முதன்மை செயலர் உத்தரவிட்டு, ஓராண்டுக்கு மேலாகியும், நில அளவை ஆணையர் போக்குகாட்டி வருவது வேதனையளிக்கிறது' என்றார். இதோடு சேர்ந்து, மாவட்டத்தில், 14 தாலுகாவிலும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நாளை வரை, தொடர்ந்து மூன்று -நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக வி.ஏ.ஓ.,க்கள் தெரிவித்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us