/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார்ப்பரேட்டுக்கு அனுமதி கூடாது வணிகர் சங்கம் வலியுறுத்தல்
/
கார்ப்பரேட்டுக்கு அனுமதி கூடாது வணிகர் சங்கம் வலியுறுத்தல்
கார்ப்பரேட்டுக்கு அனுமதி கூடாது வணிகர் சங்கம் வலியுறுத்தல்
கார்ப்பரேட்டுக்கு அனுமதி கூடாது வணிகர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2025 05:55 AM
சேலம்: சேலத்தில், மாவட்ட மளிகை வணிகர்கள் சங்க, 53வது ஆண்டு விழா, 2024 - 25ம் ஆண்டு மகாசபை, கல்வி பரிசளிப்பு என, முப்பெரும் விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பெரிய-சாமி தலைமை வகித்தார்.
அதில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:சேலத்தில், 1,700 வணிக கட்டடங்களுக்கு அதிக வரி விதிக்கப்-பட்டுள்ளதால், அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடை-களில் நுழைந்து சோதனை நடத்தும் உணவு பாதுகாப்பு துறை-யினர், தரமற்ற வெல்லம் என கூறி, 30,000 ரூபாய், உப்புக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.
அதனால் கடைகளில் சோதனை நடத்துவதை விட, அதை உற்-பத்தி செய்யும் இடத்தில் சோதனை நடத்தி தடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களால் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்ப-டுகின்றனர். கேரள மாநிலத்தை போன்று தமிழகத்திலும் கார்ப்-பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. வணிக கட்-டடம், தொழிலுக்கு அதிக வரி விதிப்பை எதிர்ப்பதை போல, குப்பைக்கான வரி விதிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்து, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய, மாநில அரசு-களை வலியுறுத்தல் உள்பட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. கவுரவ தலைவர் வர்கீஸ், செயலர் இளையபெருமாள், பொருளாளர் செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

