/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரதமர் தான் தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்: மா.கம்யூ.,
/
பிரதமர் தான் தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்: மா.கம்யூ.,
பிரதமர் தான் தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்: மா.கம்யூ.,
பிரதமர் தான் தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்: மா.கம்யூ.,
ADDED : ஏப் 12, 2024 07:12 AM
ஆத்துார் : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்துார், ராணிப்பேட்டையில், மா.கம்யூ., கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற பின், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தலையொட்டி, 7ம் முறையாக பிரதமர் தமிழகம் வந்துள்ளார். சென்னை, துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டு நிதி கேட்டபோது, அவர் வரவில்லை. தமிழக வளர்ச்சிக்கு, தி.மு.க., தடையாக உள்ளதாக, பிரதமர் பேசியுள்ளார். அவர் தான், தமிழகத்துக்கு தடையாக உள்ளார்.பா.ஜ.,வை வீழ்த்தி, 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உள்ளது. தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும். பெண்களுக்கு எதிராகவும், பட்டியல் இனத்தவர் மீது தாக்குதல் போன்ற குற்றச்செயல்கள் கணக்கெடுப்பில், உத்தரபிரதேசம் முதலிடம், குஜராத், 2ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

