தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடை அடைப்பு


ADDED : மார் 03, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: நடப்பு ஆண்டு முழு சந்திரகிரகணம் இன்று மதியம், 3:15 மணிக்கு துவங்கி மாலை, 6:50 மணி வரை நீடிக்கிறது. இதனை-யொட்டி, சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் இன்று மதியம் 1:00 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும்.

சந்திரகிரகணம் முடிந்த பின் இரவு, 7:00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்து, பரி-கார பூஜை நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக மாலையில் தரிசனம் கிடையாது. நாளை (மார்ச் 4) காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இது குறித்து கோவிலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதே போல், சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜர், அம்மாபேட்டை சவுந்தர-ராஜர், செவ்வாய்பேட்டை பாண்டு ரங்கநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மதியம் நடை அடைத்து கிரகணம் முடிந்த பின், சுத்தம் செய்து பரிகார பூஜை செய்யப்படவுள்-ளதால், இன்று மாலை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us