/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற லட்சுமி நாராயணர் கோவிலில் யாகம்
/
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற லட்சுமி நாராயணர் கோவிலில் யாகம்
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற லட்சுமி நாராயணர் கோவிலில் யாகம்
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற லட்சுமி நாராயணர் கோவிலில் யாகம்
ADDED : பிப் 26, 2024 01:45 PM
வீரபாண்டி: மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற, லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் லட்சுமி ஹயக்கீரிவ வித்யா சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
சேலம், ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள, லட்சுமி நாராயண சுவாமி பெருமாள் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
நேற்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி லட்சுமி ஹயக்கீரிவ வித்யா சிறப்பு யாகம் நடந்தது. காலை 8:00 முதல் 10:30 மணி வரை நடந்த யாகத்தில் ஏராளமான மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் வந்து வழிபட்டனர். சிறப்பு யாகம் பூர்ணாஹூதியுடன் முடிந்து, அதில் வைத்து பூஜித்த புனிதநீரால் மூலவர் பெருமாளுக்கு அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சிறப்பு யாக பூஜையில் பங்கேற்ற மாணவர்களுக்கு, அதில் வைத்து பூஜித்த பேனா, பென்சில், கயிறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

