/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள பயிற்சி சர்ச்சையில் சிக்கிய மாணவியர் வீடு திரும்பினர்
/
கள பயிற்சி சர்ச்சையில் சிக்கிய மாணவியர் வீடு திரும்பினர்
கள பயிற்சி சர்ச்சையில் சிக்கிய மாணவியர் வீடு திரும்பினர்
கள பயிற்சி சர்ச்சையில் சிக்கிய மாணவியர் வீடு திரும்பினர்
ADDED : செப் 13, 2024 07:11 AM
ஆத்துார்: அனுமதியின்றி கள பயிற்சிக்கு சென்ற, 5 மாணவி உள்பட, 14 பேர் வீடு திரும்பிய நிலையில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்சி., தாவரவியல் மூன்றாமாண்டு படிக்கும், 5 மாணவியர், 9 மாணவர்கள், கடந்த, 9ல் கள பயிற்சியாக கோவை வேளாண் பல்கலை, ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சென்றனர். அனுமதியின்றி கவுரவ விரிவுரையாளர்கள் மணிகண்டன், சுபாஷ் அழைத்துச் சென்றதாக சர்ச்சையானது. மேலும் இரு மாணவியர் மாயமானதாக தகவல் பரவ, பெற்றோர் பரிதவித்தனர். மாணவ, மாணவியர், 14 பேரும் நேற்று வீடுகளுக்கு திரும்பினர்.
இதுகுறித்து கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், ''இன்று (நேற்று), 14 பேரும் கல்லுாரிக்கு வராததால், மூன்றாம் நாளாக வருகை பதிவேட்டில் 'ஆப்சென்ட்' போடப்பட்டுள்ளது. இரு கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இயக்குனருக்கு, விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கல்லுாரி கல்வி இயக்குனரக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்,'' என்றனர்.

