/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
11 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை
/
11 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை
11 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை
11 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை
ADDED : டிச 24, 2024 07:56 AM
ஆத்துார்: கெங்கவல்லி அருகே, நடுவலுார் ஊராட்சி, 2வது வார்டை சேர்ந்த கார் டிரைவரான சங்கர் மகன் சூர்யா, 20, நாமக்கல் அரசு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம், இரண்டாம் ஆண்டு படித்து வரு-கிறார். இவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடுவலுார் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் முன், ஏழு மணி நேரம் இடைவிடாமல் சைக் கிள் ஓட்டி உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்தார்.
நேற்று காலை, 9:10 மணியளவில் சைக்கிளை ஓட்டத் துவங்-கினார். தொடர்ந்து இடைவிடாமல் சைக்கிளை ஓட்டினார். இரவு, 8:10 மணி வரை என, மொத்தம் 11 மணி நேர சைக்கிள் ஓட்டி புதிய சாதனை யை படைத்தார். இவரது சாதனையை அங்-கீகாரம் செய்து, புதுவை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு என்ற நிறுவனம் சார்பில், சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை வழங்-கினர்.இதுகுறித்து சூர்யா கூறுகையில், ''பள்ளி பருவத்தில் இருந்து, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்து, விளையாட்டு போட்டிகளில் சாதனை நிகழ்த்த முயற்சி செய்தேன். 3 மணி நேரம் சிலம்பம் சுற்றுதல்; ஒரு மணி நேரம் வேகமாக சிலம்பம் சுற்றுதல்; 16 கி.மீ., நடந்து சென்ற படி இரட்டை சிலம்பம் சுற்றுதல்; 1,008 ஆணி படுக்கை மீது படுத்த-படி சிலம்பம் சுற்றுதல்; சாக்பீஸ்களில் சைன் போல் வடி-மைத்தல் என, ஐந்து சாதனைகளை நிகழ்த்தினேன்.மேச்சேரியை சேர்ந்த வாலிபர், 8 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டினார். அவரது சாதனையை முறியடிப்பதற்காக, இன்று (நேற்று), சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வலியுறுத்தி, 11 மணி நேரம் சைக்கிள் ஓட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.

