/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால பைரவாஷ்டமியை ஒட்டி மூலிகைகளால் சிறப்பு யாகம்
/
கால பைரவாஷ்டமியை ஒட்டி மூலிகைகளால் சிறப்பு யாகம்
ADDED : டிச 13, 2025 04:53 AM

சேலம்: கால பைரவாஷ்டமியை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் நேற்று அதிகாலை, சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்-ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்-தது.
தொடர்ந்து பட்டாடை உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின் சாம்பிராணி, வெண்கடுகு, மரு-தாணி விதை, அருகம்புல், வில்வ இலை, தும்பை, விலாமிச்சை உள்பட, 108 மூலிகைகளால் சிறப்பு யாகம் நடந்தது. சிவாச்சாரியார், வேதங்கள் முழங்க, ஒவ்வொரு மூலிகைகள் யாக குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு யாகம் நடந்தது. தொடர்ந்து பைர-வருக்கு அர்ச்சனை செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்கதர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்-னதானம் வழங்கப்பட்டது.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்-தது. தொடர்ந்து சந்கனக்காப்பு, பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராள-மான பக்தர்கள் தரிசித்தனர்.
சங்ககிரி மலை அடிவராத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூத்-தாலக்குட்டை பூத்தாழிஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கால
பைவரருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
தலைவாசல் அருகே ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்-தனம், தேன் உள்பட, 16 வகை அபி ேஷக பூஜைகள் செய்யப்-பட்டன. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரித்தியங்கிராதேவி மற்றும் ஸ்வர்ண பைரவருக்கு, உலக நன்மை வேண்டி யாக பூஜை நடந்தது. அப்போது யாக குண்டத்தில் வற்றல் மிளகாய் கொட்டி வழிபட்டனர்.
தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர்.
தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார்.
வீரகனுார் கங்கா
சவுந்தரேஸ்வரர், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் உள்-ளிட்ட கோவில்களில் கால பைரவாஷ்டமி பூஜை நடந்தது.

