/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற சிறப்பு உதவி மையம் அமைப்பு
/
இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற சிறப்பு உதவி மையம் அமைப்பு
இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற சிறப்பு உதவி மையம் அமைப்பு
இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற சிறப்பு உதவி மையம் அமைப்பு
ADDED : பிப் 20, 2024 10:17 AM
சேலம்: தொழிலாளர் நல வாரியத்தில், இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்ற சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் இதர, 16 நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களும் www.tnuwwb.tn.gov.in இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. சர்வர் பழுதால் இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய, தெளிவுரைக்காக மனுதாரர்களுக்கு திருப்பப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த டிச., 2ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதற்காக சேலம் ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நல வாரியங்களில் இணைய வழியாக விண்ணப்பித்து, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, உரிய அசல் ஆவணங்கள், நல வாரியங்களில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுடன் உதவி மையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் புறப்பட்டுள்ளது.

