/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சில ரயில்கள் இயக்கத்தில் நாளை மாற்றம்
/
சில ரயில்கள் இயக்கத்தில் நாளை மாற்றம்
ADDED : செப் 10, 2025 02:19 AM
சேலம், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:ஈரோடு - சேலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே அனங்கூரில், தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த வழியே இயக்கப்படும் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் காலை, 8:50க்கு புறப்படும் லோக்மானிய திலக் டெர்மினஸ் தினசரி எக்ஸ்பிரஸ், ஈரோடு-கரூர்-சேலம் வழியே இயக்கப்படும்.
அதே பாதையில் ஆலப்புழாவில் காலை, 6:00 மணிக்கு புறப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ்; எர்ணாகுளம் சந்திப்பில், காலை, 9:10க்கு புறப்படும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றன. எர்ணாகுளம் சந்திப்பில் காலை, 7:15க்கு புறப்படும் டாடா நகர் எக்ஸ்பிரஸ், ஈரோடு-கரூர் வழியே இயக்கப்படள்ளது.
ரயில் நிறுத்த இடங்கள்
இன்று முதல், கோவை - லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ், கிருஷ்ணா ரயில்வே ஸ்டேஷனில், இரவு, 12:05க்கு நின்று செல்லும். புனே - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கொண்டபுரம் ஸ்டேஷனில், காலை, 11:22க்கும், நந்தலுாரில் மதியம், 12:49க்கும், மறு மார்க்க ரயில், நந்தலுாரில் காலை, 5:51க்கும், கொண்டபுரத்தில் காலை, 7:29க்கும் நிற்கும். வரும், 13 முதல், எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ், ராமகுண்டத்தில் நள்ளிரவு, 12:49க்கும், பெல்லம்பள்ளி ஸ்டேஷனில், நள்ளிரவு, 1:19க்கும், வரும், 14 முதல், நாகர்கோவில் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ், கூடூரில் காலை, 10:53க்கும், மறுமார்க்க ரயில் கூடூரில், இரவு, 11:43க்கும் நின்று செல்லும்.