/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுய வேலை வாய்ப்பு திட்டம் வயது வரம்பு 55 ஆக உயர்வு
/
சுய வேலை வாய்ப்பு திட்டம் வயது வரம்பு 55 ஆக உயர்வு
சுய வேலை வாய்ப்பு திட்டம் வயது வரம்பு 55 ஆக உயர்வு
சுய வேலை வாய்ப்பு திட்டம் வயது வரம்பு 55 ஆக உயர்வு
ADDED : பிப் 24, 2024 03:39 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கடன் வசதியாக்கல் முகாம் நேற்று நடந்தது. அதில் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில், 1,63,804 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், 8 சிட்கோ தொழிற்பேட்டைகள், ஒரு மகளிர் தொழிற்பூங்காவுடன், 540 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இயங்கி வருகின்றன. தவிர உயிர் ஊட்டச்சத்து குழுமம், தம்மம்பட்டி மரச்சிற்ப குழுமம் நிறுவ, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2023 - 24ல் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், 415 பயனாளிகளுக்கு, 18.50 கோடி ரூபாய் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்த, அதிகபட்ச வயது வரம்பு, 45ல் இருந்து, 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து முகாமில், 61 பயனாளிகளுக்கு, 16.11 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில், 1.75 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட தொழில் மைய மேலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

