ADDED : செப் 10, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில், நடப்பாண்டில், 67.15 ஏக்கரில் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பா பருவம் தொடங்கியதால், இரு நாட்களாக, நெல் நடவு பணி தொடங்கியுள்ளது.
2 ஏக்கரில் ஏ.டி.டி., 57 ரக நெல், ஒரு ஏக்கரில் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ரக நெல் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. மழைக்கேற்ப, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை நடவு செய்யும் பணி, அடுத்தடுத்து நடக்கும் என, பண்ணை மேலாளர் ரமேஷ் தெரிவித்தார்.