ADDED : அக் 07, 2024 03:05 AM
வீரபாண்டி: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்(ஆர்.எஸ்.எஸ்.,) அமைப்பு தொடங்கி, 99 ஆண்டு நிறைவடைந்து, 100ம் ஆண்டு தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் முன், நேற்று சங்க கொடி ஏற்றப்பட்டது.தொடர்ந்து திரளானோர், சீருடையில் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.
சந்தைப்பேட்டையில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியே சென்று பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடையை அடைந்தது. அங்கு, நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மாவட்ட செயலர் முருகேசன் வரவேற்றார்.அதில், 'தற்கால சூழலில் ஹிந்துத்துவ' எனும் புத்தகத்தை தென் பாரத தலைவர் வன்னியராஜன் வெளியிட, மூத்த ஸ்வயம் சேவகர் ஜெயராம் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து வன்னியராஜன் பேசுகையில், ''நாடு சுதந்திரம் பெற்று, 100 ஆண்டுகள் கழித்து வரும், 2047க்குள் அனைத்து துறைக-ளிலும் தன்னிறைவு பெற்று தற்சார்பு பெற்று உலகின் குருவாக பாரதம் விளங்கும். அதற்கு பாரத தேச மக்கள் அனைவரும் முயன்ற சிறு பங்களிப்பை செய்தால் போதும்,'' என்றார்.சேலம் மாவட்ட தலைவர் செந்தில்குமார், கோட்ட தலைவர் சிவ-காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதேபோல் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டியில் நேற்றுரு ஆர்.எஸ்.எஸ்., சார்பில், அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

