/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வங்கி கணக்கில் ரூ.109 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது'
/
'வங்கி கணக்கில் ரூ.109 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது'
'வங்கி கணக்கில் ரூ.109 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது'
'வங்கி கணக்கில் ரூ.109 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது'
ADDED : டிச 17, 2025 07:41 AM

சேலம்: வங்கியில், 10 ஆண்டுக்கு மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள கணக்குகளின் உரிமையாளர்களை கண்டறிவது தொடர்-பாக, வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதற்கு தலைமை வகித்து, கலெக்டர் பிருந்தாதேவி கூறியதா-வது:
உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் தொகையை ஒப்ப-டைப்பதற்கான முகாம், இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டம் முடிந்த நிலையில், 2ம் கட்டமாக கடந்த, 1ல் தொடங்கி, வரும், 31ல் முடிகிறது. சேலம் மாவட்டத்தில், 109.67 கோடி ரூபாய் வங்கி கணக்கில் உரிமை கோரப்படாமல் உள்ளது.
10 ஆண்டுகளில் இருப்புத்தொகை, ரிசர்வ் வங்கியின் வைப்-பாளர், கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற கணக்குக்கு மாற்-றப்படும். உரிமை கோரப்
படாத இத்தொகையை மீட்டெடுக்க, அருகே உள்ள வங்கி கிளையில் கே.ஒய்.சி., ஆவணங்களை ஒப்படைத்து, சரிபார்ப்-புக்கு பின் உரிமையாளர் அல்லது வாரிசுதாரர்களிடம் ஒப்ப-டைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமை கோரப்படாத தொகை பற்றி அறிய, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, https:udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் பதிவிட்டு தெரிந்து-கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

