/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் கடைகள் செயல்பட்டும் பொருள் பெற முடியாமல் தவிப்பு
/
ரேஷன் கடைகள் செயல்பட்டும் பொருள் பெற முடியாமல் தவிப்பு
ரேஷன் கடைகள் செயல்பட்டும் பொருள் பெற முடியாமல் தவிப்பு
ரேஷன் கடைகள் செயல்பட்டும் பொருள் பெற முடியாமல் தவிப்பு
ADDED : செப் 19, 2024 07:41 AM
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் முழு நேரம், பகுதி நேரம் என, 130க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. நேற்று இடைப்பாடி நகரம், வெள்ளார்நாயக்கன்பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனுார், வேலம்மாவலசு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிக்கு நேற்று மின்தடை அறிவிக்கப்பட்டு அதன்படி நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் ரேஷன் கார்டுகளை, 'ஸ்கேன்' செய்யும் பேட்டரி இயந்திரங்கள், பல கடைகளில் செயல்படவில்லை. குறிப்பாக, அந்த இயந்திரங்கள், ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்துக்கு மேல், 'சார்ஜ்' நிற்பதில்லை.
இதனால் இடைப்பாடி தாலுகாவில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகள் செயல்பட்டும், அத்யாவசிய பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. மின்தடை நாட்களில் தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் வலியுறுத்தினர்.

