/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூறைக்காற்றுடன் மழை; மின்தடையால் அவதி
/
சூறைக்காற்றுடன் மழை; மின்தடையால் அவதி
ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
ஆத்துார்: ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக வெயில் தாக்கம் இருந்தது.
நேற்று மாலை, 6:30 மணிக்கு சூறைக்-காற்று வீசியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்-பட்ட நிலையில் கன மழை பெய்தது. ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.அதேபோல் வாழப்பாடி, ஏத்தாப்பூர், மேட்டுப்பட்டி, காரிப்-பட்டி, பேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மாலை கருமேகம் சூழ்ந்து, இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு மித மழை பெய்தது. இதனால் வாழப்பாடி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர். இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.ஏற்காட்டில் நேற்று மாலை, 5:50 மணிக்கு பஸ் ஸ்டாண்ட், ஜெரீனாக்காடு, முருகன் நகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் பனிமூட்டமாகம மாறியது. இதனால், 5 அடி துாரத்தில் சென்ற வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியது. மாலை, 6:25 முதல் சாரல் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்-டிகள், வாகன முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே சென்-றனர்.

