/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்த புகாரில் டாக்டரிடம் விசாரணை
/
மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்த புகாரில் டாக்டரிடம் விசாரணை
மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்த புகாரில் டாக்டரிடம் விசாரணை
மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்த புகாரில் டாக்டரிடம் விசாரணை
ADDED : நவ 12, 2024 07:11 AM
சேலம்: சேலம் மாவட்டம் வெள்ளியம்பட்டியை சேர்ந்த பீரோ பட்டறை உரிமையாளர் சரவணனை படுகொலை செய்த ஏழு பேரை, காரிப்பட்டி போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் செந்தில்குமார், 52, பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் - மருத்துவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் போக்கு உண்டானது. பரிசோதனை செய்ய முடியாமல், சேலம் அரசு மருத்துவமனைக்கு, கைதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி சுகாதார உயரதிகாரிகளுக்கு புகார் போனது. இதன் அடிப்படையில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ராதிகா தலைமையில், செந்தில்குமாரிடம் நேற்று விசாரணை நடந்தது. கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்த காரணம், போலீசாரிடம் நடந்த வாக்குவாதம் குறித்து கேட்டறிந்து வாக்குமூலமாக பதிவு செய்தனர். அப்போது போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக செந்தில்குமார் தெரிவித்தார். முன்னதாக தோள்பட்டை வலிக்காக, சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், மருத்துவர் செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

