/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 16, 2024 07:19 AM
சேலம் : சேலத்தில், பிளஸ் 2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நிறைவடைந்தது. மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
பிளஸ் 2 பொது தேர்வு கடந்த மார்ச், 1 முதல் 22 வரை நடந்தது. சேலம் மாவட்டத்தில், 35,439 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் கடந்த, 23ல் மண்டல சேகரிப்பு மையங்களுக்கு, பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. சேலம் குளூனி பள்ளி, ஆத்துார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் ஏ.ஜி.என். பள்ளி என, மூன்று மையங்களில் ஏப்., 1 முதல், விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த, அனைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், நேற்று முதல், மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. மே 6ல் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

