/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒகேனக்கல்லில் 10வது நாளாக தடை நீடிப்பு மடம் செக்போஸ்டுடன் திரும்பும் பயணிகள்

ADDED : ஜூலை 06, 2025 01:56 AM
ஒகேனக்கல், 10வது நாளாக நேற்றும் நீடித்த தடையால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி, அணைக்கும் வரும் உபரிநீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 43,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, 50,000 கன அடியாக நேற்று மாலை அதிகரித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதேசமயம் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை, ௧௦வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை, மடம் செக்போஸ்டிலேயே போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.