/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பன்னீர்செல்வம் உளறிக்கொண்டுள்ளார் அ.தி.மு.க., கே.பி.முனுசாமி பேட்டி
/
பன்னீர்செல்வம் உளறிக்கொண்டுள்ளார் அ.தி.மு.க., கே.பி.முனுசாமி பேட்டி
பன்னீர்செல்வம் உளறிக்கொண்டுள்ளார் அ.தி.மு.க., கே.பி.முனுசாமி பேட்டி
பன்னீர்செல்வம் உளறிக்கொண்டுள்ளார் அ.தி.மு.க., கே.பி.முனுசாமி பேட்டி
ADDED : பிப் 07, 2024 12:12 PM
சேலம்: ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் பன்னீர் செல்வம் உளறிக்கொண்டுள்ளார் என்றால், யாரை ஏமாற்ற நினைக்கிறார் என அவருக்குத்தான் தெரியும்,'' என, அ.தி.மு.க.., துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.,- எஸ்.டி., பிரிவு மாநில செயலாளரும், குரும்பர் சங்கத்தின் மாநில தலைவருமான பாபண்ணா, பா.ஜ., வை சேர்ந்த பேளூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா, தி.மு.க., வை சேர்ந்த கோட்டி பஞ்சாயத்து தலைவர் நாராயணப்பா, கம்யூ., கட்சியை சேர்ந்த தாவக்கரை பஞ்சாயத்து தலைவர் யசோதா பத்தியப்பா, அனுமந்தபுரம் பஞ்சாயத்து தலைவர் யசோதா மணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர், நேற்று அக்கட்சிகளிலிருந்து விலகி, பொது செயலாளர்
இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் நடந்த இணைப்பு விழாவில், அனைவரையும் இ.பி.எஸ்., வரவேற்று, வாழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க., துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்திருந்தார்.
பின்னர் முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ஜ., மாநில நிர்வாகி பாபண்ணா உடன் 6 பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட பலர் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள இ.பி.எஸ்., அரசியல் அனுபவம் வாய்ந்தவர்.
அவர் கூறியபடி மெகா கூட்டணி அமைத்து, தேர்தலில் வென்று காட்டுவார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், பன்னீர் செல்வம் உளறிக்கொண்டுள்ளார் என்றால், யாரை ஏமாற்ற நினைக்கிறார் என அவருக்குத்தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

