ADDED : ஆக 12, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 74.
இவர் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு பெரியகிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது ஆத்துார் அருகே சிவகங்கைபுரத்தை சேர்ந்த பழனிவேல், 33, ஓட்டி வந்த, 'ஆர் 15' பைக், மாதேஸ்வரன் மீது மோதியது. இதில் மாதேஸ்வரன் படுகாயம் அடைந்தார். பழனிவேலுடன் பைக்கில் அமர்ந்து வந்த அவரது மனைவி ஜீவபாரதி, 31, காயம் அடைந்தார். மக்கள் இருவரையும் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்கு மாதேஸ்வரன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாதேஸ்வரன் மனைவி வசந்தா புகார்படி ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

