/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.35 லட்சம் காணிக்கை
/
பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.35 லட்சம் காணிக்கை
ADDED : டிச 25, 2025 05:26 AM
மேட்டூர்:மேச்சேரி பத்காளியம்மன் கோவில் உண்டியல்கள், 3 மாதங்க-ளுக்கு பின், நேற்று காலை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்-பட்டது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் அம்சா, செயல் அலு-வலர் சுதா முன்னிலையில் எண்ணப்பட்டதில், 35.25 லட்சம் ரூபாய், 35 கிராம் தங்கம், 275 கிராம் வெள்ளி இருந்தது தெரிய-வந்தது.
அதேபோல் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வ-நாதர் மற்றும் உக்ரகதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.காசி விஸ்வநாதர் கோவிலில், 1.20 லட்சம் ரூபாயும்; உக்ரகதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், 6 கிராம் தங்கம், 33 கிராம் வெள்ளி, 51,350 ரூபாய் காணிக்கை இருந்தது தெரியவந்-தது.

