/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாமக்கல் சி.இ.ஓ.,வுக்கு சேலம் கூடுதல் பொறுப்பு
/
நாமக்கல் சி.இ.ஓ.,வுக்கு சேலம் கூடுதல் பொறுப்பு
ADDED : அக் 25, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும்படி, கனவு ஆசிரியர் திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கான ஒருங்கிணைப்பு குழு அலுவலராக, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆசிரியர்களுடன் பிரான்ஸ் செல்வதால் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். வரும், 28 வரை, அவர் கூடுதல் பொறுப்பை கவனித்துக்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

