/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு லாரி உரிமையாளர் வலியுறுத்தல்
/
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு லாரி உரிமையாளர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு லாரி உரிமையாளர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு லாரி உரிமையாளர் வலியுறுத்தல்
ADDED : மார் 16, 2024 07:18 AM
சேலம் : பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க, லாரி உரிமையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க., சார்பில், பெட்ரோலுக்கு, 5 ரூபாய், டீசலுக்கு, 4 ரூபாய் குறைப்பதாக, ஸ்டாலின் அறிவித்தார். வெற்றி பெற்ற பின், பெட்ரோல் விலையில் மட்டும், 3 ரூபாயை குறைத்து விட்டு டீசல் விலையை கண்டுகொள்ளவில்லை. அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது.
2022 மே மாதம் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 8 ரூபாய், டீசல் விலையில், 6 ரூபாயை, மத்திய அரசு குறைத்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலா, 2 ரூபாய் குறைத்தது.
தற்போது சேலத்தில் பெட்ரோல், 101.62 ரூபாய், டீசல், 93.22 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆனால், அண்டை மாநிலங்களில் விலை குறைவு என்பதால் வாகனங்கள் வெளி மாநிலங்களில் எரிபொருளை நிரப்புவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் வரை வரி வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.
மாநில அரசு உடனே பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அமல்படுத்தினால் வெளி மாநிலங்களுக்கு செல்லும் வரி வருவாயை தமிழகத்துக்கு கிடைக்க செய்து அதன் மூலம் விலை குறைப்பு இழப்பை ஈடுசெய்து லாபம் ஈட்டலாம். மேலும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' வரியை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

