/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
தொழிலாளி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : மார் 14, 2024 01:29 AM
சேலம், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த, கட்டட தொழிலாளி தியாகு, 31. இவரை கடந்த ஜன., 3ல் சூரமங்கலத்தில் உள்ள அவரது வாடகை வீட்டில் மதுவில் விஷம் கலந்து கொடுத்தும் கழுத்தை நெரித்தும், 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 27, சுரேஷ், 33, விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வரலட்சுமி, 26, ஆகியோரை கைது செய்தனர்.
மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தும்படி கொலை செய்ததால், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சூரமங்கலம் போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறை, பெண்கள் கிளை சிறையில் உள்ள, 3 பேரும், ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

