/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லி கொட்டி 2 மாதங்களாச்சு! சாலை போடாததால் மக்கள் அவதி
/
ஜல்லி கொட்டி 2 மாதங்களாச்சு! சாலை போடாததால் மக்கள் அவதி
ஜல்லி கொட்டி 2 மாதங்களாச்சு! சாலை போடாததால் மக்கள் அவதி
ஜல்லி கொட்டி 2 மாதங்களாச்சு! சாலை போடாததால் மக்கள் அவதி
ADDED : செப் 19, 2024 07:34 AM
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி அலுவலகம் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் பிரதான சாலையில் இருந்து ஊராட்சி அலுவலகம் வழியே விநாயகர் கோவில் வரை ஊருக்குள், 800 மீட்டருக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி, 3 மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கு பழைய சாலை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு மேடு பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.
தொடர்ந்து ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை பணி தொடங்கவில்லை.
இதனால் ஜல்லிக்கற்கள் மீது வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்று வருகின்றனர். குறிப்பாக விசைத்தறி கூடங்கள் நிறைந்த பகுதியில், ஊருக்குள் இருந்து பிரதான சாலைக்கு வந்து செல்லவே மக்கள் பெரும்
சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் வாகன டயர்களை, ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலை போட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.