/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விளையாட்டு மைதானம் அமைக்காமல் முறைகேடு?
/
விளையாட்டு மைதானம் அமைக்காமல் முறைகேடு?
ADDED : செப் 24, 2024 07:37 AM
சேலம்: ஏற்காடு அடுத்த, வெள்ளக்கடை ஊராட்சியை சேர்ந்த இளை-ஞர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது:
வெள்ளக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்கடை கிரா-மத்தில், 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளோம். விளை-யாட்டு மைதானம் கேட்டு, 15 ஆண்டாக மன்றாடிய நிலையில், நான்கு ஆண்டுக்கு முன், மைதானத்துக்கு, 20 சென்ட் நிலம் ஒதுக்-கப்பட்டு, மூன்று கட்டமாக, மொத்தம், 10.6 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் விளையாட்டு மைதானம், இதுவரை முறையாக நிறு-வப்படவில்லை. மைதானத்தை சுற்றி தடுப்பு சுவர் மற்றும் கம்பி வலை அமைக்கப்படவில்லை. அதற்காக ஒதுக்கிய நிதி என்னவா-னது என
தெரியவில்லை. ஆனால், நிதி ஒதுக்கீடுக்கான கல்-வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி, விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''இது தொடர்பாக யூனியன் பி.டி.ஒ., மற்றும் இன்ஜினியரிடம் தான் கேட்ட வேண்டும். அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.

