/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் பெரியார் பல்கலையில் 'சின்தடிக்' மைதானம் திறப்பு விழா
/
சேலம் பெரியார் பல்கலையில் 'சின்தடிக்' மைதானம் திறப்பு விழா
சேலம் பெரியார் பல்கலையில் 'சின்தடிக்' மைதானம் திறப்பு விழா
சேலம் பெரியார் பல்கலையில் 'சின்தடிக்' மைதானம் திறப்பு விழா
ADDED : மார் 12, 2024 04:23 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், மத்திய அரசு நிதியாக, 7 கோடி ரூபாய் மற்றும் பெரியார் பல்கலை நிதியாக, 2 கோடியே, 66 லட்சம் ரூபாய் என மொத்தம், 9 கோடியே, 66 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சின்தடிக் தடகள மைதானம் அமைக்கப்பட்டது. நேற்று மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் திறப்பு விழா, நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
அதில், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்ரீஅனுராக் சிங் தாகூர் திறந்து வைத்தார். அதன் ஒருபகுதியாக, சேலம் பெரியார் பல்கலையில் அமைக்கப்பட்ட சின்தடிக் தடகள மைதானம் திறந்து வைக்கப்பட்டது. சேலம் மேற்கு எம்.எல்.ஏ.,அருள் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன், திருவனந்தபுரம் சாய் விளையாட்டு விடுதி உதவி இயக்குனர் ஆர்த்தி, பல்கலை விளையாட்டு துறை இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.

