/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் பதவியேற்பு விழா
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 13, 2024 12:43 AM
சேலம்: சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியில், 2024--25ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தலைவர், உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடந்தது.செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை வகித்தார்.
சிறப்பாளராக சேலம் எஸ்.பி., அருண்கபிலன், செந்தில் குழும செயலாளர் தனசேகர், நிறுவனத்தின் துணைத்தலைவர் மணிமே-கலை கந்தசாமி, தாளாளர் தீப்தி தனசேகர், பள்ளி முதன்மை நிர்-வாக அதிகாரி முனைவர்.சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனி-வாசன், பள்ளி முதல்வர் முனைவர் மனோகரன், துணைமுதல்வர் நளினி மற்றும் பலர் பங்கேற்றனர்.விழாவில் மாணவர் பேரவை தலைவியாக தியா, மாணவர் பேரவை தலைவராக ரிஷிதர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சி.பி.எஸ்.சி., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு500 மதிப்-பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் பார்கவன், 496 மதிப்பெண்களுடன் பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி ரிதன்யா, 495 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பெற்ற முகிலரசு ஆகியோருக்கு தலா ரூ.1,00,000, ரூ.75,000, ரூ.50,000-, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முத-லிடம் பிடித்தும், இயற்பியல், மனையியல் பாடத்தில் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீநிதிக்கு, ரூ.50,000, சான்றிதழ், கேடயம், ஆங்கிலத்தில் 100க்கு100 மதிப்பெண் பெற்ற சுவேதாவுக்கு சான்-றிதழ், கேடயம், நீட், ஜே.இ.இ. அட்வான்ஸ்-2024 தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று முதன்மை பெற்ற மாணவி தீப்தி ரோஸ் டோல்ஸ், இந்திய அளவில் தர வரிசையில் 3,144-வது இடத்தை பிடித்தும், 134 மதிப்பெண்களை பெற்ற பிரசன்னா ஆகியோருக்கு தலா, ரூ.50,000-, பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் தனசேகர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

