/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உரியவரிடம் 2 பவுன் ஒப்படைப்பு தூய்மை பணியாளருக்கு 'சல்யூட்'
/
உரியவரிடம் 2 பவுன் ஒப்படைப்பு தூய்மை பணியாளருக்கு 'சல்யூட்'
உரியவரிடம் 2 பவுன் ஒப்படைப்பு தூய்மை பணியாளருக்கு 'சல்யூட்'
உரியவரிடம் 2 பவுன் ஒப்படைப்பு தூய்மை பணியாளருக்கு 'சல்யூட்'
ADDED : மார் 11, 2024 02:17 AM
சேலம்:சேலம்,
சூரமங்கலம் உழவர் சந்தை அருகே நேற்று முன்தினம் குப்பை
சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனம் உர கிடங்கில்
கொட்டுவதற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மேற்பார்வையாளர்
குமரேசனை தொடர்பு கொண்ட ஒரு தம்பதி, உழவர் சந்தை அருகே தியேட்டரில்
சினிமா பார்க்க வந்தபோது, குழந்தையின், 2 பவுன் தங்க காப்பை
தவறவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அங்கு சேகரித்த குப்பையை துாய்மை
பணியாளர்கள் தரம் பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது
துாய்மைபணியாளர் மணிவேல், தங்க காப்பை கண்டுபிடித்து, உரியவரிடம்
ஒப்படைத்தார். 90,000 ரூபாய் மதிப்பிலான தங்க காப்பை கண்டுபிடித்து
கொடுத்த துாய்மை பணியாளரை, சக பணியாளர்கள், மக்கள் பாராட்டினர்.